90-களில் குழந்தையாக இருந்தவர்களுக்கு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ஜாக்கி சான். தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி போன்ற பல திரைப்படங்களில் நடித்த இவர், தன்னுடைய அசத்தலான சண்டைக்காட்சிகளால் உலகம் முழுவதும் பிரபலமானவர். அவரது சண்டை காட்சிகளுக்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜாக்கி சான் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 30ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தற்போதைய ஹாலிவுட் சண்டை காட்சிகள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மீது அடிப்படையில்தான் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.அவர் கூறியது: “நாங்கள் ஆக்ஷன் படங்களில் நடித்த போது, நிஜமாகவே களத்தில் இறங்கி நடித்தோம். ஆனால் இப்போது, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக ஏதேனும் செய்யலாம். ஆனால் அதில் உண்மையான யதார்த்தம் இல்லாததைக் காணலாம்” என தெரிவித்தார்.