தமன்னா தற்போது ‘ஒடேலா 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘ஒடேலா 2’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள “நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுக்கூட வாழலாம்” என்ற வசனம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஒடேலா 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு, மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோவிலுக்கு சென்ற நடிகை தமன்னா, அங்கு சாமி தரிசனம் செய்தார்.