சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்து, பெரும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த படம், சென்னையைச் சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“அமரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு, பல்வேறு சுவாரஸ்யமான காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. நேற்று வெளியான டிரைலர் கூட இன்னும் அதிகமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த சூழலில், படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முதலில் இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கத் தொடங்கியதாகக் கூறினார். மேலும், “நான் கமல் சார் இதில்ஷோ ரன்னராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், சோனி பிக்சர்ஸ் அவரையும் தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டது. கமல் சார் திரைக்கதையைப் படித்தபின், இதில் ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதற்குப் பிறகு, சிவகார்த்திகேயனிடம் கதையை சொன்னபோது, அவர் நடிக்க சம்மதித்தார். இருப்பினும், சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றதும் கமல் சார் மகிழ்ச்சியுடன் ஓகே என்க்றே கூறினார்” என தெரிவித்துள்ளார்.