நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை தம்மன்னா நடிப்பில் உருவாகும் ‘வ்வான்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். ‘பலாஜி டெலிபிலிம்ஸ்’ மற்றும் ‘டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படம் இந்த ஆண்டு முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.