பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவின் படங்களில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது ‘இறுகப்பற்று’. தற்போது, எந்தவொரு வெளியீட்டு அறிவிப்பும் இல்லாமல், ‘லவ் மேரேஜ்’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம், அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படத்தில் நடித்த சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். அவருடன், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் செய்துள்ளார். இசையை ஷான் ரோல்டன் வழங்கியுள்ளார்.
படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண கலவரம்’ என்ற முதல் பாடலும், அதற்கான ப்ரமோஷனல் வீடியோவும் வெளியாகியுள்ளன.