2005ஆம் ஆண்டு, இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுப் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157425-715x1024.jpg)
இன்றும் இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. விஜய் – ஜெனிலியா இருவருக்கும் இடையே காணக்கிடைக்காத ரசனையான கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால், இந்த ஜோடி ரசிகர்களிடம் மிகுந்த பிரபலமானது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார், மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அப்போது மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157426.jpg)
இந்நிலையில், ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதால், இந்த கோடை காலத்தில் படம் மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனது X (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.