பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சேலம் சரவணன், செம்பியன் வினோத், யோகி பாபு, ரோஷினி ஹரிபிரியன், தீபா மற்றும் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து ‘பொட்டல முட்டாயே’ என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் காட்டப்படும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பெயரும் வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும், படம் ஹோட்டல் மற்றும் உணவு சார்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இப்படம் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.