தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதில் சம்யுக்தா, தபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பின் கடைசி நாளில், செட்டில் இருந்த பூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணை தயாரிப்பாளரான சார்மி கவுர் உரையாடும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததை பற்றிய தங்கள் அனுபவங்களையும் நெகிழ்ச்சியையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த படத்தின் தலைப்பை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி அறிவிப்பதற்கு திட்டமிட்டிருந்தாலும், கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் படத்தின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

