தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவிருந்தது. ஆனால், கரூரில் விஜயின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்துள்ளது.
மேலும், நேற்று இயக்குநர் பூரி ஜெகன்னாத்தின் பிறந்தநாளாக இருந்ததால், படத்தின் தலைப்பை நேற்று அறிவிக்க திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.