தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் வெளியான அவரது திரைப்படமான ‘மார்கன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஜய் ஆண்டனியின் 25வது படமான ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை (ஜூலை 23) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். அருண் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிப்தி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.