Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

அஜித்தை வெங்கி அட்லூரி இயக்குகிறாரா? அட இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியவர்கள் அஜித் படத்தை இயக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

அதே நேரத்தில், ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து ‘சூர்யா 46’ என்ற படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படப்பிடிப்பு முடிந்த பின்பே அவர் அஜித் படத்தை இயக்குவார் என உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News