Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சர்வதேச திரைப்பட விருது வென்ற ‘வேம்பு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேம்பு. இதில் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார்.

ஏ. குமரன் ஒளிப்பதிவையும், மணிகண்டன் முரளி இசையமைப்பையும் மேற்கொண்டுள்ள இப்படம், எளிய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் screening செய்யப்பட்டதோடு பல விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற மே 23ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News