Tuesday, January 7, 2025

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் பரிசு தொகையை பெற இதை செய்ய வேண்டும்… பாடகர்கள் செந்தில் – ராஜலட்சுமி சொன்ன ஆச்சரிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், அதனை முழுமையாக அனுபவித்த ஒருவர் கூட இல்லை என்பது நிஜமாகும்.

சில நாட்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9ல் வெற்றி பெற்ற அருணா ஒரு பேட்டியில், “50 லட்சம் மதிப்புள்ள வீடு பெறுவதற்கு 15 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதனால், நாங்கள் அந்த பணத்தை கட்ட சிறிது சிறிதாக முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரும் கருத்து தெரிவித்தனர். “50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, அந்த 15 லட்சம் ரூபாயை கழித்துக் கொண்டு 35 லட்சம் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றோம்” என்று கூறினர்.

- Advertisement -

Read more

Local News