ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால், மீனா இருவரின் இளைய மகளாக நடித்துக் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் எஸ்தர் அனில். அதன் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்திலும் கமல்ஹாசனின் மகளாக நடித்தார். தெலுங்கு ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.

பின்னர் தமிழில் ஹலிதா ஷமீம் இயக்கிய ‘மின்மினி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.
படிப்பையும் புறக்கணிக்காமல் தொடர்ந்து வந்த எஸ்தர் அனில், மும்பையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தார். பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் சுற்றுச்சூழல் தொடர்பான முதுகலை படிப்பில் சேர்ந்தார். சமீபத்தில் தனது மாஸ்டர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், அதுகுறித்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.