மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இதுமட்டுமின்றி, அவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு வெளியான மகா சமுத்திரம் திரைப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்தபோது, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது, பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது, ஒரு பேட்டியில் அதிதி ராவ் கூறியதாவது, “சித்தார்த்தை திருமணம் செய்வதை பற்றி நான் ஒரு நொடியும் யோசிக்கவில்லை. உடனே அதற்குத் தயாராகிவிட்டேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். செயற்கைத் தனம் எதுவும் இல்லாதவர், எப்போதும் இயல்பாக இருப்பவர். எனக்குப் பிடித்தவர்களை வீட்டிற்கு அழைத்து அன்பாக உபசரிப்பார். அவருடைய இந்த அம்சம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவே அவரை திருமணம் செய்ய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “திருமணம் செய்துகொண்ட போது, எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. அந்த இடைவெளியில் திருமணத்தை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் நாங்கள் திரையுலகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.