சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பாலாஜி முருகதாஸ், நான் பிக் பாஸில் இருந்து வந்த பிறகு குடி பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த என் அப்பாவும் அம்மாவும் சில நாட்களில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.இது எனக்கு மிகப்பெரிய வலியாகத்தான் இருந்தது. வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம், அவர்கள் இருவரிடமும் அந்த ஒழுக்கம் இல்லை. எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துக் கொண்டு இருப்பார்கள். என் அப்பா, அம்மாவை பார்த்துத்தான் வாழ்க்கையில் எப்படி இருக்கக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். எப்போதும் என் வலியை, நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை. அனைத்தையும் என் மனதிற்குள் தான் வைத்து இருப்பேன் என்று பாலாஜி முருகதாஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
