Touring Talkies
100% Cinema

Friday, October 17, 2025

Touring Talkies

‘பைசன்’ என்ற ஆங்கிலத் தலைப்பு வைக்க காரணம் இதுதான் – இயக்குனர் மாரி செல்வராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. 

இதில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம், அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடி கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

செய்தியாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ் கூறியதாவது: “படத்திற்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிக்கவும். தமிழ்நாட்டைத் தாண்டியும் படம் சென்றடைய தயாரிப்பு நிறுவனம் பொதுவான தலைப்பை வைக்கச் சொன்னார்கள். ஆனால் எனது திரைக்கதை புத்தகத்தில் இன்றும் ‘காளமாடன்’ என்றே உள்ளது என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News