Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இது புதிய சொல்லப்படாத கதை… காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி படப்பிடிப்பு தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சேத்தன் டிகே இயக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ எனும் திரைப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முறையாக பூஜையுடன் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கியதை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இது ஒரு புதிய, சொல்லப்படாத கதை என்றும், அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று காஜல் அறிவித்தார்.

விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News