Friday, January 24, 2025

நான் நடித்த படங்களில் என் காட்சிகளை எடிட் செய்து தூக்கி விடுவார்கள்… நடிகர் KPY பாலா ஆதங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நிகழ்ச்சிகளான “கலக்கப்போவது யாரு” மற்றும் “குக் வித் கோமாளி” மூலம் புகழடைந்தவர் பாலா. குறிப்பாக “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் தனிப்பட்ட காமெடி திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததால், அவரை KPY பாலா என அழைக்க ஆரம்பித்தனர். தன்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு உதவிகளை செய்து வருவதிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, இதுவரை நான் 18 திரைப்படங்களில் நடித்துள்ளேன். டைட்டில் கார்டில் என்னுடைய பெயர் இருக்கும். படத்திலும் நடித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய காட்சிகளை எடிட் செய்து முழுவதும் நீக்கி விடுவார்கள். இது பலமுறை எனக்கு நடந்திருக்கிறது. ஒரு முறை, ஆர்.ஜே. பாலாஜி அண்ணா என்னுடைய படத்தை பார்த்துவிட்டு, ‘டைட்டிலில் உன்னுடைய பெயர் இருக்கிறது. ஆனால், படத்தில் உன்னுடைய காட்சி எங்கும் வரவில்லை’ என்று கேட்டார். நானும் ‘ஆமாம் அண்ணா,’ என்று வருத்தத்துடன் பதிலளித்தேன்.

அப்போது அவர் என்னிடம், ‘உனக்காக ஒரு நாள் நல்ல வாய்ப்பு வரும். உன்னிடம் பாட்டு, டான்ஸ், காமெடி, நடிப்பு என அனைத்து திறமைகளும் இருக்கிறது. அதனால், உனக்காக ஒரு வாய்ப்பு தேடி வரும். அதுவரை நீ இப்படி சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று கூறினார். அதன்பிறகு, நான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. அவர் சொன்னதைப் பின்பற்றி வருகிறேன்,”** என்று அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News