முதல் படத்தில் கவுதம் என பெயரை வைத்தது மூலம் ஒரு தமிழ் இயக்குநர் போல தன்னை காட்டிக்கொண்டதாகவும், பின்னர் தனது படங்களில் ‛மேனன்’ என்று சேர்த்துக் கொண்டதாகவும் கவுதம் மேனன் மீது குற்றச்சாட்டு முன்னதாக கூறப்பட்டது. இதுகுறித்து கவுதம் மேனன் மனம் திறந்து, இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்
அவர்,முதல் படத்திலேயே என் முழு பெயரான ‛கவுதம் வாசுதேவ் மேனன்’ என்பதை டைட்டிலில் இட விரும்பினேன். ‛வாசுதேவ்’ என் தந்தையின் பெயர் அல்ல; அது என் தாத்தாவின் பெயர். நான் பிறக்கும்போதே அந்த பெயர் எனக்கு இணைக்கப்பட்டது. ‛மேனன்’ என்பது குடும்ப பெயர். பள்ளி சான்றிதழில் முதல் முதல் ‛கவுதம் வாசுதேவ் மேனன்’ எனவே இருந்தது. ஆனால், டைட்டிலில் ‛மேனன்’ சேர்க்கப்பட்டால் என்னை மலையாள இயக்குநராக பார்ப்பார்கள் என்று கூறி, அதை சுருக்கி ‛கவுதம்’ என்று வைக்கச் சொன்னார்கள். எனக்கு வழியின்றி ஒப்புக்கொண்டேன்.
அவர் மேலும் கூறுகையில், அந்த படத்திற்குப் பிறகு சில மாற்றங்களை செய்ய இயக்குநரை அழைத்தனர். ஆனால், அதை கடுமையாக எதிர்த்தேன். அதன் பிறகு, நான் தன்னுடைய அடுத்த படங்களில் ‛கவுதம் மேனன்’ என்று பெயரை டைட்டிலில் சேர்த்தேன். ‛வாரணம் ஆயிரம்’ படத்திலிருந்து என் முழு பெயரையும் டைட்டிலில் இடுவதே சரியான தருணம் என்று நினைத்தேன்,” என்றுள்ளார்.