Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

என்னை ‘ஜானு பாப்பா’ என்று அழைக்கிறார்கள்… நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள் – ஜான்வி கபூர் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சில ஹிந்திப் படங்களில் நடித்த பின் ‘தேவரா 1’ படத்தின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமாகிறார். இந்த படம், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் ஜான்வி தமிழில் பேசினார், அதனால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மும்பையில் வளர்ந்தவர் என்றாலும், தமிழில் இவ்வளவு அழகாக பேசுகிறார் என்பதால் ரசிகர்கள் வியந்தனர். இப்போது, அவர் தெலுங்கில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில் தெலுங்கு ரசிகர்களையும் அதே வகையில் வியக்க வைத்துள்ளார், குறிப்பாக அவரது தெலுங்கு பேச்சின் சுவாரஸ்யம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நேற்று ஐதராபாத்தில் நடைபெற இருந்த ‘தேவரா 1’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி கூட்டம் அதிகம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதற்காக, ஜான்வி கபூர், “இந்த வார்த்தைகளை நேரில் உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன், ஆனால் அது சாத்தியமாகவில்லை. விரைவில் உங்களை சந்திக்கும் நம்பிக்கையுடன், இப்போதைக்கு இந்த குறுஞ்செய்தியை உங்களுக்காக பதிவிட்டிருக்கிறேன், என கூறி வீடியோவைக் பதிவிட்டார்.

அந்த வீடியோவில், “என்னை ‘ஜானு பாப்பா’ என்று அழைக்கும் அனைத்து தெலுங்கு ரசிகர்களுக்கும், குறிப்பாக என்டிஆர் சார் ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். நீங்கள் அனைவரும் என்மீது காட்டும் அன்பைக் காண மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என் அம்மா எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். நீங்கள் என் அம்மாவுக்கும், எனக்கும் மிக முக்கியமானவர்கள். உங்களை பெருமைப்படுத்துவதற்காக நான் மிகுந்த உழைப்புடன் இருப்பேன். ‘தேவரா’ எனது முதல் படியாக இருக்கும்,” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News