சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில், தேனிசை தென்றல் தேவா ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் தேவா கூறுகையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் என்னை தாதாவாக வேடத்தில் நடிக்கக் கேட்டார்கள். அந்தப் படத்தின் கதை மிகவும் அற்புதமானது. நான் இப்படத்தில் ஏன் நடிக்க முடியவில்லை என்ற காரணத்தையும் அவர்களிடம் தெரிவித்தேன். தற்போது நான் கான்சர்ட்களில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் போன்ற பல இடங்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கிடையில், அவர்களுக்கு சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு ஏற்றபடி ஷூட்டிங்கிற்குச் செல்ல முடியாது என்பது மிகப்பெரிய காரணம்.
மேலும், நடிக்காமல் இருக்க இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால், எனக்கு நடிக்க தெரியாது. வசனங்களை மனப்பாடம் செய்து பேச வேண்டியது எனக்கு சிரமம். நான் அதை மறந்துவிடுவேன் எனத் கூறியுள்ளார்.