சக்திமான் தொடர் நடிகர் முகேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று வரை நான் பார்த்தது கிடையாது. ஆனால், அவருடைய ரசிகன் நான். எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் என்றார். மேலும் ரஜினிகாந்த், மக்கள் மத்தியில் இதுதான் என்னோட ரியாலிட்டி என தலையில் டோப்போ வைத்துக் கொள்ளாமல், விலையுயர்ந்த கோட் சூட் அணிந்துக் கொள்ளாமல் எளிமையாக அவர் ரசிகர்களை பார்த்து இரு கைகளையும் உயர்த்தி வணங்குவதை பார்த்தாலே இந்தளவுக்கு எந்தவொரு சூப்பர் ஸ்டாரும் இந்தியாவில் இருக்கவே வாய்ப்பில்லை என்று தான் எனக்கு தோன்றியது.
