இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கியுள்ள ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம், தனது சினிமா பிரபஞ்சமான லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ் (LCU)ஐ சேர்ந்தது அல்ல என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநராக உருவெடுத்துள்ள லோகேஷ், இதுவரை இயக்கிய படங்களில் “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகியவை LCUயின் ஒரு பகுதியாக இருந்தன. இதேபோல் “கூலி”யும் அந்த வரிசையில் சேரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மேலும், இதில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார் எனவும் செய்திகள் முன்னதாக வலம் வந்தன.
ஆனால் சமீபத்திய பேட்டியில் லோகேஷ் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், “கூலி என்பது ஒரு தனித்துவமான படம். இது LCUயுடன் சம்பந்தப்பட்டதல்ல. கமல் சாரை ‘கூலி’க்கு கொண்டுவர விரும்பவில்லை. அதேபோல் ரஜினி சாரை ‘விக்ரம்’ படத்துக்குள் கொண்டுவர எண்ணமும் இல்லை. ‘கூலி’ என்பது ரஜினி சாருக்காகவே தனித்துவமாக எழுதப்பட்ட கதை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.