புதிய இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸ் மாஃபியா கம்பெனி திரைப்படம், வடசென்னை பின்னணியில் நடைபெறும் ஒரு தாதாவின் வாழ்க்கை மாற்றங்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடிக்கிறார். மேலும், பிக் பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முனிஷ்காந்த், தீபா, ஷகீலா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இதில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்குப் இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. நேற்று மாலை வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

