நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூட்யூப் பிரபலமான ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஆரோமலே’. இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார் .
‘ஆரோமலே’ படத்தின் ‘டண்டணக்கா லைப்’ என்ற பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் டி. ராஜேந்தர் பாடியிருந்தார் அந்த பாடல் வைரலானது. 2வது பாடலான “எப்படி வந்தாயோ” என்ற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல் சமீபத்தில் வெளியான “ஆரோமலே’ படத்தின் 3வது பாடலான மன்னாரு வந்தாரு பாடல் வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் ‘ஆரோமலே’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் சிம்புவின் பின்னணி குரல் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

