பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராகவும் திகழ்கிறார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறின.
தற்போது, பவன் கல்யாண் ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளனர், மேலும் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரும் பான் இந்தியா படமாக தயாராகியுள்ளது.
முதலில் இந்த திரைப்படம் கடந்த மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அதன் வெளியீட்டு தேதி பலமுறை தள்ளி போனது. இதனையடுத்து, இப்போது ஜூலை 24-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அந்த டிரெய்லர் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.