மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான எம்புரான் மற்றும் தொடரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால் பிரபல இயக்குனரான சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘ஹிருதயப்பூர்வம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு பட நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் பூவே உனக்காக பட நடிகை சங்கீதா, சித்திக், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘என்னும் எப்பொழுதும்’ படத்தை தொடர்ந்து பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மோகன்லாலும் இயக்குனர் சத்யன் அந்திக்காடும் இணைந்துள்ளனர். கடைசியாக வெளியாகி வரவேற்பைப் பெற்ற இரண்டு படங்களை போல் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று மோகன்லால் ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஹிருதயப்பூர்வம்’ படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வரும் 28ம் தேதி வெளியாகிறது.