தமிழில் வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால்.
தற்போது அவர் நடித்துள்ள திரைப்படம் ஆர்யன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷாலுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்யன் படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.