கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தினேஷ் மங்களூரு, 55. ‛கேஜிஎப்’ படத்தில் ஷெட்டி ரோலில் நடித்து கவனம் பெற்றவர். இதுதவிர ‛கிச்சா, கிரிக் பார்ட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களிலேயே நடித்தார்.பக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஒருவாரமாக உடுப்பி, குந்தாபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. தினேஷ் மங்களூருவின் திடீர் மறைவு கன்னட திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
