நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன், தற்போது தனது அடுத்த திரைப்படமாக அருண் விஜய் நடிப்பில் ‘ரெட்ட தல’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் தமிழில் கடைசியாக சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும், தான்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றுகிறார். ‘பிடிஜி யூனிவர்சல்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் அருண் விஜய் மிகவும் ஸ்டைலிஷான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும், தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது