அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் கதையின் போக்கை விளக்கும் ஒரு ஸ்பெஷல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சத்யராஜ் ஒரு புனைவு எழுத்தாளராக தோன்றுகிறார். அவர் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை எழுதுகிறார், அவரின் உரையாடலுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில், ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்பதைக் கேட்கும் கேள்வியுடன் வீடியோ முடிவடைகிறது. இப்படம் வரும் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே மேற்கொள்கிறார், இசை அமைப்பாளர் கே.சி. பாலசரங்கன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.