சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்த முயற்சியாக பாம் என்கிற படத்தை உருவாக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக, ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ராஜ்குமார், எடிட்டிங் பிரசன்னா என தொழில்நுட்பக் குழுவும் வலுவாக அமைந்துள்ளது. படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின்படி, பாம் திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.