Wednesday, October 9, 2024

வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு! #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “வேட்டையன்” படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் உலகமெங்கும், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

தமிழக திரையரங்குகளில் நான்கு காட்சிகள் பொதுவாக திரையிடப்படும் நிலையில், சிறப்பு காட்சிக்கு கூடுதலாக தமிழக அரசு ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ளது. இதனால், நாளை ஒரே நாளில் ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.  

முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணிக்கு முடியும். இந்நிலையில், தமிழக அரசு நாளைய தினம் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News