தமிழ் சினிமாவில் கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் தனது நடிப்பில் வெளியான டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தார். அதேசமயம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம், எமோஷன்–காமெடி கலந்த கதையம்சத்துடன் அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. முதல் பாடலான ஊரும் பிளட் ஏற்கனவே வெளியிட்டு வைரலான நிலையில், தற்போது இரண்டாவது பாடல் ‘நல்லா இரு போ’ வெளியிடப்பட்டுள்ளது.