தமிழில் வெளியான ‘ஒரு நொடி’ திரைப்படத்துக்குப் பிறகு, அதே படக்குழுவினரால் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘ஜென்ம நட்சத்திரம்’. இது ஒரு ஹாரர் வகை படமாக உருவாகியுள்ளது. மணிவர்மன் இயக்கியுள்ள இப்படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் தமன், ரக்ஷா, தலைவாசல் விஜய், மால்விகா மல்கோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சஞ்சய் மாணிக்கம் அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடும் இப்படம் வரும் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமன், “எக்ஸோர்சிஸ்ட், ஓமன், போல்டர்ஜிஸ்ட் போன்ற பல கிளாசிக் ஹாரர் படங்கள் இன்று வரை ரசிகர்களிடையே பிரபலமாகவே உள்ளன. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் பதிப்பாக இருக்கும். இது ஒரு ஸ்பின் ஆஃப் படத்தைப் போல, அதாவது ப்ரீக்வெல் போல அமையும். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மிக அதிர்ச்சியானதாகவும், யாராலும் எதிர்பார்க்க முடியாததாகவும் இருக்கும். இதில் பல சவாலான அனுபவங்களை எதிர்கொண்டோம். 29 இரவுகள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது” என்றார்.