நடிகர் பரத் “ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” திரைப்படத்திற்கு பிறகு “காளிதாஸ் 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பெருமுயற்சியாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம். குரு இயக்குகிறார். இதில் நடிக்கவிருக்கும் அனைத்து நடிகர்களும் பூஜை விழாவில் கலந்துகொண்டனர்.இப்படத்தில், சசிக்குமார் மற்றும் சத்யராஜ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் ஒளிப்பதிவை சதீஷ் குமார் மேற்கொள்கிறார், இசையமைப்பை என்.ஆர். ரகுநந்தன் செய்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தை தர்மராஜ் வேலுசாமியின் “ஸம்பாரா எண்டெர்டெயின்மென்ட்” நிறுவனம் தயாரித்துள்ளது.