தமிழ் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்த நடிகர்களில் நடிகர் புகழும் ஒருவர். ‘குக் வித் கோமாளி’, ‘கலக்கப்போவது யார்’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மற்றும் தனிப்பட்ட நடிப்பு திறமையை நிரூபித்ததன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெற்றவர்.
இதனடிப்படையில், ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டிஎஸ்பி’, ‘அயோத்தி’ போன்ற திரைப்படங்களில் முக்கியமல்லாத கதாபாத்திரங்களில் நடித்து, நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது கதையின் மைய நாயகனாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 27ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு அடுத்ததாக, அவர் ஒரு புதிய திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.