சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தற்போது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் குஷி ரவி மற்றும் கவுசல்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், பின்னர் ‘காதல் கொண்டேன்’, ‘மயக்கம் என்ன’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கி திரையுலகில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்தவர்.
இயக்குநராக மட்டும் இல்லாமல் இவர், தற்போது நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘பீஸ்ட்’, ‘மார்க் ஆண்டனி’, ‘ராயன்’, ‘சொர்க்கவாசல்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.