மாதவனுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள “டெஸ்ட்” என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் நான்காம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, “மண்ணாங்கட்டி சின்ஸ் 1960”, “டாக்சிக்”, “ராக்காயி”, “மூக்குத்தி அம்மன் 2” போன்ற படங்களில் அவர் நடித்துவருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலியுடன் அவர் நடித்துவந்த “டியர் ஸ்டூடன்ட்ஸ்” என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் உருவாக்கக் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு நிறைவடைந்த தருணத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, வித்யா ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இணைந்து இயக்கியுள்ளனர்.