2015ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘டிமாண்டி காலனி’. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது, இதனைத்தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

பின்னர் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார்.இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பையும் வசூலைரும் பெற்றது. தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அருள்நிதியே இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்துவருகிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.