நடிகை சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டிரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ மூலம் ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்து இந்த வருடம் வெளியிட்டார். அப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.

அடுத்து, சமந்தா தனது இரண்டாவது தயாரிப்பாக ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதற்கான சமந்தாவின் ஆண் நண்பர் ராஜ் நிடிமொரு உடன் கலந்து கொண்டார். முதல் தயாரிப்பின் போதும் ராஜ் நிடிமொரு சமந்தாவுக்கு உதவியாக இருந்தார், இப்போதும் அதேபோல் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
இப்படத்தில் சமந்தா, குல்ஷன் தேவய்யா, திகநாத், கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஓ பேபி’ படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

