Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தணல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2010-ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானவர் அதர்வா. ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். சமீபத்தில் அவர் நடித்த டி.என்.ஏ. திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் பராசக்தி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் அதர்வா.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் ‘தணல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தற்போது இப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அன்னை பிலிம் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும், ஷா ரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

- Advertisement -

Read more

Local News