Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தொடர்ந்து தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி… எப்போது ரிலீஸ் ஆகும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு ‘ ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தற்போது அவர் ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார், மேலும் இசை அமைத்துள்ளவர் கீரவாணி.

நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாக அமைந்துள்ளது. இது கடந்த மாதம் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நாளில் படம் வெளிவரவில்லை. பின்னர், படம் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை. இதற்குப் பிறகு, படம் ஜூன் 12ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் இணையத்தில் வதந்திகள் பரவின. தற்போது, படம் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என மற்றொரு வதந்தி பரவியுள்ளது. இப்படியாக, வெளியீட்டு தேதியைப் பற்றிய குழப்பம் தொடர்ந்து நீடிப்பதால், ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News