சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி அவருக்கு கவுரவம் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி திராவுபதி முர்மு, மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் மற்றும் கர்ணாபரம் ஆகிய இரண்டு படங்களில் அவரது சிறப்பான நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

இதுகுறித்து, கேரளா வந்த மோகன்லாலிடம் செய்தியாளர்கள், “ஜனாதிபதி இந்த இரண்டு படங்களை குறிப்பிட்டது ஏன்?” என்று கேட்டனர்.
அதற்கு மோகன்லால்,இந்த இரண்டு படங்களுமே கிளாசிக்கல் கலை மீது அடிப்படை அமைந்துள்ளன. இதில் ஒன்றானது சமஸ்கிருதத் த்ராமாவாகும், மற்றொன்று முப்பரிமாண கலை வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இதுபோன்ற கலை வடிவங்களை திரைப்படங்களில் பயன்படுத்தமாட்டார்கள். அதனால் ஜனாதிபதி இந்த இரண்டு படங்களையும் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்” என்றார்.