சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்களும் இசையிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாக ‘மோனிகா’ என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
‘சிக்கிடு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘பவர் ஹவுஸ்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடலும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.