ரஷிப் ஷெட்டி இயக்கத்தில் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் காந்தாரா 2 படத்தில் ராஜசேகரா கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் தன்னுடைய நடிப்பில் அளித்த நேர்த்தியான செயலுக்கு சமூக வலைதளத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு நீங்கள் அளித்த அன்பு, விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளுக்கு ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். உங்கள் வார்த்தைகள் எனக்கு விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன.
மேலும் இந்தப் படம் உங்களுடன் இவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. இந்த அழகிய செய்தி இன்று ஆயுத பூஜை என்ற புனித நாளில் எனக்கு வந்தது, இது தருணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது” என தெரிவித்துள்ளார்.