மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவர் நடித்துத் தயாரித்து முடித்த படம் ‘படை தலைவன்’ ஆகும். இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கஸ்தூரி ராஜா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அன்பு, இசையமைத்தவர் இளையராஜா. மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்தின் உருவத்தையும் இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர்.

‘படை தலைவன்’ திரைப்படம் யானையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் படமாகும். இதில் சண்முக பாண்டியன் யானை பாகனாக நடித்துள்ளார்.
இதற்காக அவர் தன் உடற்கட்டை மேம்படுத்தி, யானைகளை பராமரிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. படத்தின் டிரைலரும் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.