மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கண்ட ‘பிரேமலு’ படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரதீப் ரங்கராஜனுடன் ‘DuDe’ படத்திலும் நடிக்கிறார். ‘இரண்டு வானம்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளார்.
மேலும் சூர்யாவின் 46வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், விக்னேஷ் ராஜா இயக்கும், தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் மேலும் சில தென்னிந்தியபடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.