அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள். இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா.இந்த மனிதர்கள் திரைப்படம் நாளை வெளியாகிறது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
